லலிதா சகஸ்ர நாமம் அஞ்ஞானத்தை விரட்டி மெய் ஞானத்தைத் தரக்கூடியது. பொதுவாக லலிதா சகஸ்ர நாமம் குரு பரம்பரையில் ஞான தீபமாக விளங்கக் கூடியது.
மூல தேவியான லலிதை, அவளுடைய அங்க தேவதைகள், உப தேவதைகள் இவர்களைப் பற்றியும், அந்தத் தேவிகளின் குணாகுணங்கள், அணுக்கிரக, நிக்கிரக தன்மை இவைகளை மிக தெளிவாக விளக்குகின்றன. ஒரு மரம் என்றால் அந்த மரத்திலே காய்க்கும் காயோ, பழுக்கும் பழமோ அந்த மரத்தின் இயல்புப்படி ஒத்த ஒரு குணம் கொண்டதாக இருக்கும்.
அதனுடைய சுவை புளிப்போ, துவர்ப்போ, இனிப்போ, உறைப்போ, கரிப்போ ஏதோவொரு சுவை உடையதாக மட்டும் இருக்கும். ஆனால் லலிதா சகஸ்ர நாமமாகிய மகா விருசத்தில் கனிந்த கனிகளாகிய மந்திர நாமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையையும் ஒவ்வொரு தேவதையையும் ஒவ்வொரு பலனையும் தருவதாக விளங்குகிறது. இதுவே இதன் மகத்தான சிறப்பு.'
No comments:
Post a Comment