Friday, 18 May 2018

கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்கள்

கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்கள்

விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 

அஷ்டமி நாள்    - அஷ்டமியின் பெயர்  -  பூஜை பலன்கள்

வைகாசி 23 (6-6-2018) புதன்கிழமை இரவு : அதிக அஷ்டமி - தொழில் விருத்தி உண்டாகும்.

ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி - கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.

ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி - கல்வியில் மேன்மை ஏற்படும்.

ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல்    : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.

ஆவணி 18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி - லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.

புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை     : சம்புகாஷ்டமி - ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி    - சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.

கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி - தனவரவு உண்டாகும். காலபைரவாஷ்டமி  - கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.

மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி     - தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.

தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி    - மன பயம் விலகும். 

தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல் :     உயர் பதவி கிடைக்கும்.

மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி - போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.

பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி - திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபடுதல் வேண்டும்.

No comments:

Post a Comment