ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.
பொதுப் பொருள் :
சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.
தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
No comments:
Post a Comment