Saturday 26 August 2017

லட்சுமிதேவியின் 16 பெயர்களும் அதற்கான விளக்கங்களும்

Related image

மகா லட்சுமி என்பவள் அனைவரின் வீட்டிலும் குடியிருப்பவள். அனைவருக்கும் செல்வத்தை அள்ளிதருபவள். லட்சுமியை பொதுவாக அஷ்ட லட்சுமி, மகா லட்சுமி என்று மட்டுமே அனைவரும் அரிந்தது. ஆனால், மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. 

பெயர்களும் - அர்த்தமும் : 

ஹரிணி : பசுமையான மேனி அழகைப் பெற்றவள். 

சூர்யா : கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள். 

ஹிரண்மயி : பொன்னி. 

ஹிரண்ச வர்ணா : பொன்னிற மேனியாள். 

சந்திரா : நிலவுக்கு நிகரான முகமுடையாள். 

அனபகா முனிம் : நிலை தவறாதவள். 

ஆர்த்திரா : நீரில் தோன்றியவள். 

பத்ம ஸ்திதா : தாமரையில் வாசம் செய்பவள். 

பத்ம வர்ணா : தாமரை வர்ணத்தாள். 

ஆதித்ய வர்ணா : சூரியகாந்தி உடையவள். 

வருஷோபில்வ : கூவளத்தில் தோன்றியவள். 

கரிஷிணி : பெருகும் பசுச் செல்வமுடையவள். 

புஷ்ஷிணி : யானைகளால் வணங்கப்படுகிறவள். 

பிங்கள : செம்மை நிறம் கொண்டவள். 

யக்கரிணி : தர்ம தேவதை. 

No comments:

Post a Comment