Saturday 26 August 2017

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு, கொடுக்கும் பொருளின் பலன்கள்

Image result for sivan abishegam

கோவில்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய பலரும் விரும்புவார்கள், அந்தவகையில் ஒவ்வொரு பொருளையும் வாங்கி அபிஷேகம் செய்ய கொடுக்கும் போது, அதனாலும் ஒரு சில நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறியாமலே நாம் பல நல்ல செயல்களை செய்வதுண்டு அந்த வகையில் ஒரு சில பொருட்களை குறிப்பாக சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு, திருக்கோயில்களுக்கு கொடுக்கும்போது ஏற்படும் பலன்களைப் பார்ப்போம். 
1. கந்த தைலம் - குடும்பத்திலும் இன்பம் பெருகும். 
2. மாப்பொடி - கடன் பிரச்சனைகள் தீரும். 
3. மஞ்சட்பொடி - அரசாங்கத்தின் மூலம் நன்மைகள் கிடைக்கும். 
4. நெல்லிப்பருப்புப்பொடி - நோய்நொடிகளிலிருந்து விடுதலை கிடைக்கும். 
5. திருமஞ்சனத்திரவியம் - கொடிய நோய்கள் எளிதாக தீரும். 
6. ரசபஞ்சாமிர்தம் - முக்கி கிடைக்க உதவும். 
7. பழபஞ்சாமிர்தம் - முக்தி கடைக்கும் 
8. பால் - ஆயுள் விருத்தியடையும் 
9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம் கிடைக்கும். 
10. இளவெந்நீர் - முக்தி கிடைக்கும். 
11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம் கிடைக்கும். 
12. இளநீர் - ராஜயோகம் கிடைக்கும் 
13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும் 
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம் 
15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும் 
16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும் 
17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும் 
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும் 
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும் 
20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும் 
21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும் 
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும் 
23. பன்னீர் - குளிர்ச்சி தரும் 
24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும் 
25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும் 
26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும் 
27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும் 
28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் 
29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் 
30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் 
31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் 
32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும் 
33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும் 
34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும் 
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்

No comments:

Post a Comment