Sunday 27 August 2017

கோவில் கட்டப்பட்டதின் அவசியமும் அதன் பயன்களும்

Related image

கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள்.அது எதற்கு என்றான் பல உண்மைகள் அதில் உள்ளன. 

கோபுரம்: 
ஆலய கோபுரத்தை விட ஊரில் வேறு எந்த கட்டிடமும் உயர்வாக இருக்கக்கூடாது என்பது அந்நாளையது எழுதப்படாத நீதி.ஏன்னென்றால் கோபுர கலசங்களில் வரகு, சாமை, கார், சம்பா முதலிய நெல் தானியங்களை நிரப்பி வைப்பார்கள் நெல் நிரப்பப்பட்ட கூர்மையான கலசம் மிகச்சிறந்த இடி தாங்கியாக பயன் படும்.அதுவும்மில்லாது நெல் பற்றாக்குறை வரும்பொழுது அதை உபயோகிப்பார்கள்.நெல் நிரப்பப்பட்ட கூர்மையான கலசம் மிகச்சிறந்த இடி தாங்கியாக பயன் படும். 
கோபுரங்கள் மிக மிக பெரியதாக இருக்கும் ஏனெனில் அக்கால கருவூலமாக அது பயன்படுத்தப்பட்டது.போர்காலங்களில் அவ்வூர் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் பயன்பட்டது.இராணுவத்தினால் ஆயுத கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது. 

குளம்: 
மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க. 

மண்டபங்கள்: 
அரசவையாக, நீதிமன்றமாக, கலைக்கூடமாக,பாடசாலையாக…….. பயன்பட்டது. 

தல விருட்சம்: 
மர வளர்ப்பின் முக்கியத்தை வலியுறுத்த. 

பிராகாரம்: 
மக்கள் ஒன்று கூட,ஊர் நன்மைக்காக பொதுக்கூட்டங்கள் கூட்ட,சந்தை அமைக்க,பிள்ளைகள் 
விளையாடி மகிழ… 

பல அறைகள்: 
தானியம் சேகரிக்க,கருவூலமாக,பொக்கிஷ அறையாக,மக்கள் பதிவுகளை வைக்க, 

சிற்ப்பங்கள்: 
நம்மால் மறக்கப்பட்ட பரப்பல உண்மைகளை நமக்கு நினைவுறுத்த

No comments:

Post a Comment