Wednesday 30 August 2017

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணமும், நீரால் அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலனும்

Image result for நீர் கொடுத்தல்

நமது உறவினர், நண்பர்கள் என தெரிந்தநபர், தெரியாத நபர் என யாராவது நமது இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும், தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். 

No comments:

Post a Comment