தேவியின் ஆயுதங்கள் என்பது யோகிகளும் சித்தர்களும் உபாசகர்களும் மட்டுமே அறிந்த ஒன்று.
தனுர் பாண பாசம், அங்குசம் எனும் ஆயுதங்களை நான்கு கரங்களிலும் உடையவளாக தேவி துதிக்கப் படுகிறாள்.
தனுர் எனும் அம்பும் வில்லும் கூடிய சக்தியை மாதங்கி எனும் மந்திர தேவதை அவளே மதுரை மீனாக்ஷி எனவும், சபரிமலை அய்யப்பன் எனவும் துதிக்கப்படுகிறாள்.
சிவன், பார்வதி (காளி) கிராதமூர்த்தி வடிவில் அர்ஜுனனுக்கு வழங்கிய ஆயுதமே பாசுபதாஸ்திரம். அந்த அஸ்திரத்தாலேயே பார்வதி முன்னர் பண்டாசுர வதம் செய்தாள். பண்டாசுரன் ஏவிய விக்ன யந்திரத்தை உடைகக ஏவிய் சக்தியே விக்னேஷ்வரன் எனும் கணங்களின் நாதர். கணபதி.
சிந்தைக்கு அதிபதியான சிம்மவாகினி எனும் வராகியே மகாகாளியின் சேனா நாயகி. சொப்னாவஸ்தை எனும் அவஸ்தையே வராகி எனும் ஆயுதங்களின் தலைவி. வராகியை பஞ்சபாணேச்வரி என்று உபாசிப்பார்கள். அதாவது மகாசக்தியின் பாண சக்தி ஆவாள். சம்சோபிணி, வித்ராவணி, ஆகர்ஷணி, வசங்கரி, உன்மாதினி எனும் 5 பாண சக்திகள் அவளுடன் அடக்கம்.
ஆழ்மன உணர்வுகளின் தேவதை வராகியின் அங்க தேவதை- லகுவார்த்தாளி எனப்படுவாள்; உன்மத்த பைரவி என்ற பெயரும் உண்டு.
வராகியின் உபாங்க தேவதை "ஸ்வப்ன வராகி" எனப்படுவாள். மோசமான அனுபவங்களை நீக்கி அருளுபவள் இவளே.
ப்ரத்யங்க தேவதை என்பது உள்முக தேவதை மாயாரூபிணியான திரஸ்கரணி எனும் மறைப்பு சக்தியாக இருப்பவள்.
அச்வாரூடா எனும் பாச சக்தி - அபராஜிதா (யாராலும் வெல்லப்படாதவள்) இந்த சக்தி குதிரை வடிவில் (ஆம் எனும் பீஜாட்ச்சரம்) துதிக்கப்படுபவள். இந்த சக்தியை உபாசிக்கும் வடிவில் தான் கொடிமரத்திலும், தேரிலும், தெய்வசக்திகள் பவனி வரும் வாகனமாகவும் குதிரை உள்ளது.
அங்குச சக்தி என்பது சம்ப்கத்கரீ எனும் மகாலக்ஷ்ம்யின் சப்தம். அந்த சப்தமே ( அஸ்த் நாத ப்ரபோதினி ஈம்) தறிகட்டோடும் ஐம்பொறிகளை அடக்கும் சக்தி நான் எனும் அகங்காரத்த்தை அடக்குபவளாக ரிஷிகள் துதிக்கின்றனர். இவள் யானையில் பவனி வருபவள்.
திரிசூலமாக இருப்பவள் சூலினி துர்க்கா. அருகம்புல் கூட துர்க்கையின் சக்தியே.
No comments:
Post a Comment