Thursday 24 August 2017

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்?

Image result for vinayagar 

ஒரு பெரியவர் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை "பகவான் தான் நம்மைக் காப்பாற்றுகிறார்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்தார், ""என் குடும்பத்தை நான் தான் உழைத்துக் காப்பாற்றுகிறேன். நீங்கள் சொல்கிற மாதிரி கடவுள் என்றும் பாதுகாத்த மாதிரி தெரியலையே,' 'என்றார்.

பெரியவர் அவரிடம், சில கேள்விகளைக் கேட்க கேள்வி கேட்டவர் பதில் சொன்னார்.

""நேற்று ராத்திரி நன்றாக சாப்பிட்டீரா?''
""சாப்பிட்டேன்...''
""நன்றாக உறங்கினீரா?''
"உறங்கினேன்...''
""எத்தனை மணிக்கு படுத்தீர்?''
""பத்து மணிக்கு?''
""எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது?
""பத்தரை இருக்கும்''.
""எப்போது எழுந்தீர்?''
""ஐந்து மணிக்கு''.
""ராத்திரி பத்தரைக்குப் பிறகு ஐந்து மணி வரை உம் நிலை எப்படியிருந்தது என்று தெரியுமா?''
""தூக்கத்தில் மனுஷனுக்கு என்ன தெரியும்?''
""அப்படியானால், அந்த நேரத்தில் உம்மை நீரே பாதுகாத்துக் கொண்டீரா?''
""இல்லை...''
""பார்த்தீரா! ஆழ்ந்து தூங்கும் போது பாம்போ, பூச்சியோ உம்மைக் கடித்தாலும்தெரியாது. நீர்படுத்திருக்கும் கட்டடம் இடிந்து விழுந்தாலும் உணரமாட்டீர்! அதுபோன்ற ஆபத்தையெல்லாம் தடுத்து இறைவன் தானே உம்மைக் காத்தான்...!''

பெரியவர் இப்படி கேட்டதும், கேள்வி கேட்டவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

இப்போது புரிகிறதா!

இறைவனால் மட்டுமே நம்மைப் பாதுகாக்க முடியும். அவன்இருக்கிறானா இல்லையா என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை.

No comments:

Post a Comment