1.கை கால்களை கழுவுதல்:-
கோவிலிற்குள் நுழைவதற்கு முன் நமது கை கால்களை நீரால் கழுவிவிட்டு உள்ளே செல்லுதல் வேண்டும். அவ்வாறு நாம் செல்லும் போது கிருமிகளை ஆலயத்துக்கு வெளியிலேயே அக அசுத்தங்களை கலைந்துவிட்டு செல்கிறோம்.
2.கோபுர வழிபாடு:-
ஆண்களாக இருந்தால் கோவில் கோபுரத்தை நோக்கி இரு கைகளை மேலே தூக்கி வணங்குதல் வேண்டும். அவ்வாறு செய்வதனால் கோவில் கோபுர கலசத்தில் உள்ள தங்கம் வெள்ளி, பித்தலை ஆகிய உலோகங்களோடு சேர்ந்த நவ தானியங்கள் மூலம் பரப்பப்படும் மின் காந்த ஈர்ப்பு சக்திகள் நமது உடல் வருகிறது. அந்த நொடியில் இருந்து நமது உடல் நல்ல ஈர்ப்பு சக்தி (Positive Energy)க்கு ஆட்படுகிறது.
3.விநாயகர் வழிபாடு:-
விக்கி போடுதல், ஞான குட்டு வைத்துக் கொள்ளுதல், அத்தனையும் ஆசனங்கள் இந்த ஆசனங்களை செய்யும் போது நமது நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெருகிறது.
4.மூலவர் வழிபாடு:-
ஆலயங்களில் மூலவரை பல வகை மலர்களாலும் துளசியாலும், வில்வ இலைகளாலும் இன்ன பிற மூலிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அது நுகர்தலின் மூலம் நமது உடலுக்குள்ளும் அதன் பயன் சேரும்.
5.தீபாராதனை:-
பல ஆலயங்களில் சூடன்களின் மூலம் தீப ஆராதனை இருக்கும் சில ஆலயங்களின் விளக்கெண்ணெய் மூலம் தீப ஆராதனை இருக்கும் இரண்டும் கிருமி நாசினியாக செய்படுகிறது.
6.விபூதி, குங்குமம், மஞ்சல், சந்தனம்:-
இந்த நான்கும் வாசனை பொடிகள் மட்டும் மல்ல சிறந்த கிருமி நாசினியும் கூட. அதிலும் இந்த விபூதியின் மகிமை இருக்கிறதே சொல்லில் அடங்காதது. என் உயிரினும் மேலான இந்து சொந்தங்களே!!!! உங்களுக்கு ஏதேனும் சிராய்ப்பு காயங்கள் இருந்தால் அதன் மீது விபூதியை போட்டு வாருங்கள் இரண்டே நாட்களில் காயத்தின் வடு கூட தெரியாமல் மறையும்.
7.பிரசாதம்:-
துளசி தண்ணி, தேங்காய் தண்ணி, புளி சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், பொங்கல் இவைகளே கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தது.
8.பிரகாரத்தை சுற்றி வருதல்:-
நீங்கல் நன்றாக கணகெடுத்துக் கொண்டால் கோவில் பிரகாரத்தை மூண்ரு முறை சுற்றி வருதல் வேண்டும். அப்படி கணக்கில் வைத்துக் கொண்டால் நீங்கள் குறந்தபட்சம் 1 இல் இருது 3 கிலோ மீட்டர் நடை பயிர்ச்சி செய்வதற்கு சமம்.
9.குரு தியானம்:-
அனைவரும் குரு பகவானிடத்தில் 5 நிமிடம் தியானம் இருந்து செல்லுதல் வேண்டும் அதன் மூலம் மன நிம்மதி கிடைக்கிறது. மனதிற்கு அமைதியான தியானமும் கிடைக்கிறது.
10.நவ கிரக வழிபாடு:-
நவ கிரகங்களை 9 முறை சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அங்கு நவ கிரகங்களை 9 வகையான எண்ணெய்களின் மூலம் அபிஷேகம் செய்திருப்பார்கள். அதன் மருத்துவ குணங்களும் நமது உடலையே சாரும்.
11.கொடி மர வழிபாடு:-
எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்தின் முன் விழுந்து வணங்குதல் வேண்டும். அதுவும் ஒரு வகையான ஆசனமே.
No comments:
Post a Comment