உலகில் உள்ள மதங்களில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், எந்த வகையில் பூஜித்தாலும் இறைவன் ஏற்றுக் கொள்ளும் ஒரே மதம் இந்து மதம் அந்த வகையில் சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவற்றையும் ஏற்றுக் கொண்டு, மக்களை ஆட்கொள்ளும் தெய்வங்கள் நிறைந்தது இந்து மதம். அந்த வகையில் சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவற்றின் எளிமையான விளக்கம்.
சரியை
நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.
கிரியை
சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.
யோகம்
தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.
ஞானம்
நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்
No comments:
Post a Comment