விக்னங்களைத் தீர்ப்பதில் முதலில் உள்ளவர் விக்னேஷ்வரன், இதன் காரணமாகத்தான் பல்வேறு நாடுகளிலில் உள்ள மக்களும் விநாகயகரை பல்வேறு வடிவங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
ஆதியில் காணபத்தியம் என்ற ஒரு மதம் விநாயகரை மட்டுமே துதித்து வழிபடும் ஒரு மதமாகவே இருந்துள்ளது. இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம். என்றும் கூறுவார்கள்.
கால நிலை மாற்றம் போன்றவற்றால் தனித்தனியாக பிரிந்திருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம் போன்ற இன்னும் பல்வேறு மதங்கள் ஒன்றினைந்து இந்து மதத்திற்குள் ஒன்றாக ஐக்கியமாகின.
விநாயகர் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் திகழ்கிறார் என்று ‘கணேச புராணம்’, கூறியுள்ளது. கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
அதன்படி கிருதாயுகத்தில் மகாகடர் என்றும், திரோதாயுகத்தில் மயூரேசர் என்றும், துவாபர யுகத்தில் கஜானனன் என்றும், கலியுகத்தில் கணேசன், விநாயகர், பிள்ளையார் போன்ற திருநாமங்களுடன் விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கணபதி:-
கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன்:-
ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன்:-
கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன்:-
விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பலன்:-
இது தவிர பல்வேறு திருநாமங்கள் விநாயகப்பெருமானுககு உள்ளதாகவும், ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு பலன் உள்ளதாகவும் புராணங்கள் கூறுகின்றது. அதில் மிகவும் முக்கியமாக 51 திருநாமங்கள் விளங்குகின்றன.
51 நாமங்களும் பலன்களும்:-
1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.டப31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை
No comments:
Post a Comment