Friday, 18 August 2017

சிவபெருமானின் திருவிளையாடல் : கருங்குருவிக்கு உபதேசம்


முந்தைய பிறப்பில் நிறைய புண்ணியங்கள் செய்த பக்தர் ஒருவர், சிறிது பாவச் செயல்களும் செய்ததால், அடுத்த பிறப்பில் கருங்குருவியாக பிறந்தார். காகங்கள் விரட்டி, விரட்டி அந்த கருங்குருவியை கொத்தி துன்புறுத்தின. இதனால் நெடுந்தொலைவு பறந்து சென்ற அந்த குருவி, ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து, தனது நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மரத்தின் கீழே அமர்ந்து, மதுரையின் சிறப்பு குறித்து சிலர் உரையாடிக் கொண்டிருந்தனர். மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சோமசுந்தரரை வழிபட்டால், எண்ணியது திண்ணமாகும் என்று பேசிக் கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சுந்தரேஸ்வரரை சிரத்தையுடன் வணங்கியது. குருவியின் பக்தியை மெச்சிய இறைவன், அதற்கு 'மிருத்யுஞ்சய மந்திரத்தை' (மரணத்தை வெல்லும் மந்திரம்) உபதேசித்தார். இதுவே கருங்குருவிக்கு உபதேசித்த லீலை என ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment