
சிவனுக்குரிய நிறம் சிவப்பு. "செம்மேனிப்பெருமான்' என்று அவரை குறிப்பிடுவர். தீயைப் போல சிவந்தவர் என்பதால் "அழல் வண்ணன்' என்றும்,"பவள மேனியன்' என்றும் சொல்வர். திருமழபாடி பதிகத்தில் சிவனை "பொன்னார் மேனியனே' என்று சுந்தரர் போற்றுகிறார். சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு நள்ளிருளில் ஆடும் சிவனை, வெண்ணிறம் கொண்டவர் என்று சொல்பவர்களும் உண்டு. பாற்கடலில் எழுந்த நஞ்சை குடித்தவர் என்பதால், கழுத்தில் நீலநிறம் அவருக்குண்டு. அதனால், "நீலகண்டர்' எனப்பட்டார்.
No comments:
Post a Comment