Tuesday 8 May 2018

கடவுளிடம் கேட்கக் கூடாதது


வேட்டையாட சென்ற மன்னன், முனிவர் ஒருவரை கண்டான். அவரை அரண்மனைக்கு அழைத்து வந்து உபசரிக்க விரும்பினான்.

அதற்கு முனிவர், "நான் திருப்தியாக வாழ்கிறேன். உண்பதற்கு பழங்களை மரங்கள் தருகின்றன. தண்ணீரை ஓடை தருகிறது. குகையில் நிம்மதியாக உறங்குகிறேன். எங்கும் வரவில்லை,'' என்றார்.

"என் திருப்திக்காக வந்து, ஏதாவது பெற்று செல்லுங்கள்'' என்று சொல்ல முனிவர் சம்மதித்தார். அரண்மனை வந்ததும், முனிவரை காத்திருக்க சொன்ன மன்னன், ''கடவுளே, எனக்கு இன்னும் பொன்னும் பொருளும் தந்தருள்,'' என வேண்டினான்.

இதை கவனித்த முனிவர் சட்டென புறப்பட்டார். மன்னன் பதறிப்போய், ''சுவாமி... ஏன் கிளம்பி விட்டீர்கள். உபசரிப்பை ஏற்காமல் செல்கிறீர்களே?'' என்றான். முனிவர் அவனிடம், ''மன்னா... நீயே பிச்சைக்காரனாக இருக்க, எனக்கு உன்னால் என்ன கொடுக்க முடியும்?''

''என்ன சுவாமி... சொல்கிறீர்கள்? ஒன்றும் புரியவில்லையே'' ''பிரார்த்தனையின் போது கடவுளிடம், 'இதைத் தா, அதைத் தா' என்று வேண்டினால் அதற்கு பெயர் பிச்சை தானே?'' மன்னன் தலைகுனிந்தான்.

No comments:

Post a Comment