Wednesday, 9 August 2017

சிற்பக்கலையின் அற்புத பொக்கிஷம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்


“பிரம்மன் தூங்கும் ேநரத்தில் தான் இந்த சிற்பங்களை சிற்பிகள் வடித்திருக்க கூடும். இதை எண்ணத்தில் வடித்தவர்கள், வண்ணம் மட்டும் தீட்டியிருந்தால், உயிர் பெற்று உலக அதிசயத்தில் இடம் பெற உரிமை கேட்டிருக்கும்’’. இது தாரமங்கலம் கோயில் சிற்பங்களை கண்டு மலைத்து நின்ற தமிழ் பேராசிரியர் ஒருவர் எழுதி வைத்து விட்டுச்சென்ற வரிகள். நமது முன்னோர்களின் அற்புத சிற்பகலைக்கு ஒப்பற்ற சான்றாக திகழ்கிறது சேலம் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோயில். சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த தாரக வனம். 

திருமால் தாரைவார்த்துக் கொடுத்த மங்கள நிகழ்ச்சி நடந்ததால், ‘தாரைமங்களம்’ என்று அழைக்கப்பட்டது. அது காலப்போக்கில் ‘தாரமங்கலம்’ என்று மாறியது என்பது பெயர்க்காரணம். முன்ெபாரு காலத்தில் இங்கு வாழ்ந்த பெரும்செல்வந்தரான கெட்டி முதலி என்பவர், தனது மந்தையில் இருந்து பசு ஒன்று விலகிச் செல்வதைக் கண்டார். அந்தப் பசு தாரக வனமாக இருந்த பகுதியில், ஒரு புற்றின் மீது தனது பாலைச் சொரிவதை கண்டு அதிசயித்தார். அந்த புற்றினை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு சிவலிங்கம் இருந்தது. இந்த நிலையில் ெகட்டிமுதலியின் கனவில் தோன்றிய சிவன், பசுபால் சொரிந்த இடத்திலேயே தனக்கு ஒரு கோயில் எழுப்புமாறு கூறினார். 

இதையடுத்து தாரக வனத்தில் கைலாசநாதரான சிவனுக்கு கோயில் கட்டப்பட்டது என்பது தலவரலாறு. அரிய கலைப் ெபாக்கிஷமான கைலாசநாதர்-z கோயில் மேற்கு திசை நோக்கியபடி உள்ளது. ஐந்து நிலை கொண்ட 150 அடி உயர ராஜகோபுரம், உச்சியில் 7 கலசங்களோடு மிளிர்கிறது. ராஜகோபுரமானது, இருபுறமும் யானைகளும், குதிரைகளும் இழுத்து வரும் ரதம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கோயிலின் உள்ளே கலைநுட்பத்துடன் கூடிய 20 பிரம்மாண்ட தூண்களுடன் மகாமண்டபம் உள்ளது. இந்த மகாமண்டபத்திற்கு எதிரே கருவறையில் மூலவரான கைலாசநாதர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தின் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கு நோக்கியபடி சிவகாமசுந்தரி அம்மன், முருகப்பெருமான் சன்னதிகள் உள்ளன. இதர கோயில்களில் இறைவனை வழிபடுவதற்காக திரளும் பக்தர்கள், இங்கு வரும் போது இதயம் ஈர்க்கும் அற்புத சிற்பங்களையும் கண்டுவியந்து நிற்கின்றனர். 

கோயிலின் இரண்டாவது வாசலுக்கு முன்பு, ஆறு தூண்களை கொண்ட குதிரை, யாளி மண்டபம் உள்ளது. இதில் இரண்டில் யாழிகளும், நான்கில் குதிரைகளும், அவைகளில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் இரண்டு விதமாக இருப்பது போன்றும் அமையப் பெற்ற சிற்பங்கள், ஒரு யாளியின் வாய்க்குள் நான்கு அங்குல குறுக்களவு உள்ள கல் உருண்டை, வாய்க்குள்ளே உருண்டு கிடப்பதும், அதை வெளியே எடுக்க முடியாததும் சிற்பக்கலையின் சிகரமாக உள்ளது. மகாமண்டபத்தின் மேற்கூரையில் ஏழடி சதுரமுள்ள ஒரே கல்லில் விரிந்த தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளது. 

அந்த தாமரை இதழ்களை கிளிகள் கொத்துவதும், தாமரை ெமாட்டின் மீது ஒரு கல்வளையம் சுழன்று கொண்டே இருப்பதும் கலைநுட்பத்தின் உச்சம்.கைலாசநாதரை கைகூப்பி வழிபட்டால் துயரங்கள் நீங்கும், துன்பங்கள் விலகும். வளங்கள் கொழிக்கும். வாழ்க்கை நிலைக்கும். தோஷங்கள் போகும். அமைதி கிடைக்கும் என்பது தலைமுறைகள் கடந்து வழிபட்டு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால் எல்லாநாட்களிலும் அலையாய் பக்தர்கள் திரண்டு வழிபட்டுச் செல்கின்றனர்.

சூரியன்- சந்திரன் வழிபடும் அதிசயம்!

ஆண்டுதோறும் உத்திராயண, தட்சிணாயன புண்ணிய காலமான மாசி மாதத்தில், மூன்று நாட்கள் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் கைலாசநாதரை வழிபடும் காட்சி, தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காலத்தில் கைலாசநாதர் சிலை மீது சூரியக்கதிர் பட்டு ஒளி வீசுவதைக் காண பக்தர்கள் பலரும் குவிகிறார்கள். அந்தி சாயும் நேரத்தில் சூரியனின் கதிர்களும், சந்திரனின் ஒளியும் சிவலிங்கம் மீது படுகிறது. மாசி 9ம் தேதி முதல் 13ம் தேதிக்கு உட்பட்ட 3 நாட்களில் இந்த அதிசயம் நிகழ்கிறது.

No comments:

Post a Comment