குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது. சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு. இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. "கதிர் வேய்ந்த மங்கலம்' என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவளுக்கு "ஆகாச துர்க்கை' என்றும் பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பு.
Sunday, 6 August 2017
குலதெய்வம் தெரியவில்லையா! வனதுர்க்கையை வணங்குங்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment