Monday 27 November 2017

ஒருவனே தேவனென்று போற்றுவோம்


ஆஸ்திகனோ, நாத்திகனோ...மனித சக்திக்கு மீறிய ஏதோ ஒரு சக்தி இருப்பது நிதர்சனம். ஆஸ்திகவாதி அவனது மனநிலையின் அடிப்படையில் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், சக்தி என்றெல்லாம் இறைவனைப் பிரிக்கிறான். தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்பதற்காக, இந்த தெய்வங்களுக்கு புராணக்கதைகளை உருவாக்கியுள்ளான்.

அப்பைய தீட்சிதர் என்ற மகான், ""மகேஸ்வரனுக்கும் (சிவன்), ஜனார்த்தனனுக்கும் (விஷ்ணு) இடையே துளிக்கூட பேதம் இல்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை..என் மனம் சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமானிடம் தான் அதிகம் ஈடுபடுகிறது,'' என்கிறார். லீலாசுகர் என்னும் மகான், ""நான் சைவன் தான். நமசிவாய நாமத்தை ஜபம் செய்பவன் தான். ஆனால், என் மனம் என்னவோ காயாம்பூ நிறம் (கருப்பு) கொண்ட கோபிகா கண்ணனிடமே லயிக்கிறது,'' என்கிறார்.

எனவே, மனிதர்கள் என் தெய்வம் தான் பெரிது, உன் தெய்வம் சிறிது என்று சொல்லத் தேவையில்லை. எல்லாரும் ஒரே இறைவனையே வணங்குகிறார்கள். பெயரில் தான் வித்தியாசம். இதன் காரணமாக, கடவுளே பொய் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பிரச்னையை நாத்திகர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆத்திகர்கள் பாதை வகுத்து விடக்கூடாது.

No comments:

Post a Comment