Thursday, 23 November 2017

கடவுளை பார்க்க முடியுமா!


"கடவுளைக் காட்டு' என ஒரு ஆத்திகனிடம் கேட்டான் நாத்திகன். ஆத்திகன் ஒரு வாகன சக்கரத்தைக் காட்டி பேசினான். இதோ அந்த உரையாடல்.

""இந்த டயர் எப்படி ஓடும் சக்தி பெறுகிறது?'' 

""காற்றால் தான்...காற்றடைத்தால் ஓடிவிட்டுப் போகிறது''.

""சரி...டயர் என்னும் ஜடப்பொருளைப் பார்க்கிறாய். அதனுள் இருக்கும் காற்று என்னும் சக்தி கண்ணுக்குத் தெரியுமா?'' ""தெரியாதே!''

""அந்த காற்று உன் உடலில்பட்டால் உணர முடியுமா?''

""முடியும்!''

""அப்படித்தான் கடவுளும்! அவரைப் பார்க்க முடியாது. ஆனால், அவரது கருணையை உணர முடியும்''.

No comments:

Post a Comment