Monday 20 November 2017

எல்லா மந்திரமும் ‘ஓம்’ என்று தொடங்குவது ஏன்?

எல்லா மந்திரமும் ‘ஓம்’ என்று தொடங்குவது ஏன்?

எல்லா மந்திரமும் ‘ஓம்’ என்று தொடங்குவது ஏன்?, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

ஐந்து எழுத்துக்களின் ஒலிகளை உள்ளடக்கியது "ஓம்' என்ற சொல். அ, உ,ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் "ம்' என்ற ஒலியும், அதன் நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. "அ' பிரம்மனையும், "உ' விஷ்ணுவையும், "ம' ருத்ரனையும், "ம்' சக்தியையும், அதன் நாதம் சிவ பரம்பொருளையும் குறிக்கும். 

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக் குறிப்பது "ஓம்'. கலைஞானம் என்னும் கல்வியறிவு, மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது. 

எனவே தான், எல்லா மந்திரங்களையும் "ஓம்' என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு "என்றும் புதியது' என்று பொருள். ஆம்...கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் "என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர் இஷ்ட தெய்வத்தை "ஓம்' என்று கூறி பிரார்த்திப்பர்.

No comments:

Post a Comment