Thursday 23 November 2017

பகவானும் பழைய சாதமும்


சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு "நீராகாரம்' என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். 

"பழையதும் பகவானும் ஒண்ணு' தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை "நாராயணன்' என்கிறோம்.

No comments:

Post a Comment