Wednesday 29 November 2017

கற்பனை செய்தாலே பலன்


கடவுளைத் தரிசித்தால் மட்டும் தான் என்றில்லை. சில நல்ல நிகழ்வுகளைக் கற்பனை செய்தாலே பலனுண்டு. ராமனின் பட்டாபிஷேக நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மனக்கண் முன் கற்பனை செய்தாலே போதும்! ராமகுடும்பத்தின் பூரண நல்லாசியுடன் செல்வவளம் பெற்று வாழும் பலன் கிடைக்கும்.

பதினான்கு வருட வனவாசம் முடிந்து புஷ்பக விமானத்தில் ராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். அவரைக் கண்ட மக்கள் அன்பினால் வெறி பிடித்தவர்கள் போல் ஆடிப்பாடினர். மலர் தூவி வரவேற்றனர். அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது, பரதன் ராமனின் பாதுகைகளை (காலணி) எடுத்து வந்தான். சுக்ரீவன், விபீஷணன் இருவரும் கவரி வீசினர். அனுமன் வெண்கொற்றக்குடை பிடித்தான். வில்லையும், அம்பையும் சத்ருக்கனன் தூக்கி வந்தான். சீதை தீர்த்தக் கமண்டலம் பிடித்திருந்தாள். வாலியின் மகன் அங்கதன் உடைவாளும், கரடிகளின் தலைவரான ஜாம்பவான் தங்கக்கவசமும் வைத்திருந்தனர். 

அன்னையரான கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரையும் வணங்கிய ராமர் அரியணையில் அமர்ந்தார். அவருக்கு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் வசிஷ்டர் அபிஷேகம் செய்தார். நட்சத்திரத்திற்கு நடுவே முழுநிலவு போல ராமர் காட்சியளித்தார். மக்கள் சந்தோஷக் களிப்பில் மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment