Saturday, 25 November 2017

லக்னம் - ராசி இவற்றில் எது முக்கியம்?

laknam

உங்களுடைய ராசி என்ன என்று கேட்டால் பளிச் என்று பதில் சொல்லும் ஒருவரிடம் அவரது லக்னம் என்ன? என்று கேட்டால் சற்றுத் திணறுவார்கள். ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பதுதான் உயிர். ராசி என்பது உடல்தான். 

லக்னம் தான் ஒருவருடைய ஆளுமைத்திறன், சிந்தனை, செயல், அதிர்ஷ்டம் அவருடைய முமு வாழ்க்கையிலும் அவருக்கு நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு ஆதாரத்தூண் போன்றது. ராசி என்பது லக்னத்திற்கு துணை செய்யும் ஒரு அமைப்புதான். 

லக்னத்திற்கு இத்தனை சிறப்பு இருக்கும் போது ஏன் ராசிக்கு மட்டும் நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். தொலைக்காட்சி, ஊடகங்கள் ராசிக்கு தான் பலனைக் கணித்து வெளியிடுகின்றனர். லக்ன பலன்களை யாரும் கண்டுக்கொள்ளவதில்லை அது ஏன்? 

பூமியின் சுழற்சிப் பாதையின்படி எந்த ராசியில் பூமி சென்று கொண்டிருக்கிறதோ அந்த ராசி வீடே ஒரு மனிதனின் லக்னம் எனப்படுகிறது. ஏன்னென்றால் லக்னமானது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறிக்கொண்டு இருக்கும். அதாவது ஒவ்வொரு இரண்டு மணி நேரமும், அடுத்தடுத்த லக்னங்களில் மனிதர்கள் பிறப்பார்கள். 

ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்கு பின்னால் இந்த பனிரெண்டு ராசிகளில் எந்த ராசி இருக்கிறதோ அதுவே அந்த ஜாதகரின் ராசி எனப்படுகிறது. ஒரு ராசியின் அளவு சுமாராக இரண்டே-கால் நாள் இருக்கும்.  

லக்னம் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பதால், அன்றைய தினத்துக்கான பலன்களை கணிக்கும் போது ராசியை வைத்து பொதுபலன் கணிக்க முடியுமே தவிர, மாறிக்கொண்டே இருக்கும் லக்னத்துக்கான பலனைத் துல்லியமாக கணிக்க முடியாது. 

எனவே தான், ஊடகங்களில், செய்தித்தாள்களில் தோராயமாக பொதுபலனை கணித்துச் சொல்கின்றனர். ஆனால், அவை துல்லியமான பலன்கள் அல்ல. லக்னத்தையும், ராசியையும் இணைத்துத்தான் பலன் சொல்ல முடியும். சொல்லவும் வேண்டும். அப்போதுதான் அது முறையான ஜோதிட பலன்களாக இருக்கும். 

ஜாதகருக்கு லக்னப்படி நன்மையும், ராசிப்படி தீமையும் அளிக்கக்கூடியது. லக்னம்-ராசி இரண்டின்படியும் ஒரு கிரகம் ஜாதகருக்கு தீமை செய்ய வேண்டிய அமைப்பு இருந்தால் நிச்சயம் அதன் தசையில் கெடுபலன்கள் தான் நடக்கும் என்று கண்களை மூடிக் கொண்டு பலன் சொல்லிவிடலாம். 

No comments:

Post a Comment