Wednesday, 29 November 2017

ரதசப்தமியன்று புனித நீராடுங்கள்


தைமாத வளர்பிறை சப்தமியில் கொண்டாடப்படுவது ரத சப்தமி. (இந்த ஆண்டு பஞ்சாங்க மாறுபாட்டின் காரணமாக மாசியில் வருகிறது) இந்நாளில் சூரியன் தன் தேரை, மேற்குநோக்கி திருப்பி செலுத்துவதாக ஐதீகம். அன்று அதிகாலையில் புனித நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

சுமங்கலிகள் ஏழு எருக்க இலைகளை அடுக்கி, மேல் இலையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவேண்டும். ஆண்கள் அட்சதை (மஞ்சள் கலந்த அரிசி) வைத்து நீராடலாம். அன்று பூஜையறையில் தேர்க்கோலமிட்டு, சுற்றிலும் செங்காவிப்பட்டை இட வேண்டும். சூரியனுக்கு சர்க்கரைப்பொங்கலும், வடையும் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம், சூரிய சகஸ்ரநாமம் ஜபிக்க வேண்டும். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளம், சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். 

No comments:

Post a Comment