"வயிற்றில் உண்டாகும் பசித்தீயை மனிதனின் பரமஎதிரி' என்று வேதம் சொல்கிறது. பசித்தவனுக்கு உணவளித்தால் விருப்பத்துடன் சாப்பிடுவான். ஆனால், வயிறு நிரம்பியதும்,""போதும் போதும்! பரமதிருப்தியா சாப்பிட்டேன்'' என்று கைகளை உயர்த்திவிடுவான். தங்கத்தை அள்ளி தானமாகக் கொடுத்தாலும், "இன்னும் போதாது' என்று திரும்பத் திரும்பக் கேட்பான். பசிப்பிணியைப் போக்குவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர் வள்ளலார். இவரது தனிப்பெருங்கருணையால் வடலூரில் சத்தியதர்ம சாலை நிறுவப்பட்டு ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. இவர் ஏற்றி வைத்த அணையாஅடுப்பில் எரியும் தீ, அங்கு வருவோரின் பசித்தீயை அணைத்துக் கொண்டிருக்கிறது.
Thursday, 23 November 2017
தீயை அணைக்கும் தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment