Monday, 20 November 2017

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன ?

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். துளசி தீர்த்தத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தது துளசி. 

துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி. 

செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு ஒரு இரவு வைத்திருந்து அந்த நீரைக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராது. 

வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment