Tuesday 28 November 2017

அப்பா நெருப்பு... அம்மா நீர்


பரமேஸ்வரனின் நேத்ராக்னியில் இருந்து (கண்களில் இருந்து வந்த நெருப்பு) சுடரே குமாரசுவாமி. திருப்புகழில் சொல்லப்பட்டுள்ளபடி நெருப்பையும் எரிக்கும் ஞானாக்னி அவர். அவர் அக்னியாக விளங்கினாலும் இருதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால், ரொம்ப ஜலசம்பந்தமும் உள்ளவர். சரவணன் என்ற பொய்கையில் தான் சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா சரவணப்பொய்கை என்னும் நீராக இருந்தாள். ஜலரூபமாக இருந்த கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் "காங்கேயன்' என்று பெயர். 

எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. கார்த்திகைப் பெண்டீருக்குப் பிள்ளையாகி கார்த்திகேயன் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கிருத்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட "ஷடக்ஷரி' இவருடைய மந்திரம்(சரவணபவ). காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாத்சரியம் என்று ஆறு பகைவர்களைக் கொன்று, ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே. 

ஆதியில் முருகக்கடவுள் சங்கப்புலவராக இருந்தார். பின்னர் புலமையோடு சக்தி, ஞானம்,வைதீகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். "நான்மறை சம்பந்தன்' என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்கிறார். முருகனைப் புகழ்கிறார் மகாபெரியவர்

No comments:

Post a Comment