Thursday 23 November 2017

சரண கோஷம் என்பதன் விளக்கம்

சரண கோஷம் என்பதன் விளக்கம்

சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லிப் படிப்பவர்களுக்குச் சுபம் உண்டாகுகிறது. சரண கோஷம் என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

சுவாமி என்பது முக்கணங்களான ரஜோ, தமோ, ஸ்தவகணங்களை ஜெபித்து இதனை அகற்ற வல்லது. சுவாமி என்ற உச்சரிப்பின் வெளிப்பாட்டினால் சொல்லிப் படிப்பவர்களுக்குச் சுபம் உண்டாகுகிறது.

‘ச’ என்ற எழுத்திற்கு நம்மிடம் உள்ள காமக் கிராதிகள் எனும் சாத்தான்களை அழிக்கும் சத்தசம்காரம் என்று பொருள்.

‘ர’ என்ற எழுத்திற்கு ஞானத்தைத் தர வல்லது என்று பொருள்.

‘ண’ என்ற எழுத்திற்கு சாந்தத்தைத் தரவல்லது என்று பொருள்.

‘ம்’ முத்ரா என்ற எழுத்திற்கு துக்கங்களைப் போக்கவல்லது. சுவாமிக்கு மகிழ்ச்சி தரக்கூடியது.

ஆகையால், நம்முடைய நாபி கமலத்தில் இருந்து எழும் பிராண வாயுவை இதய மார்க்கமாகச் செலுத்தி, நாவின் மூலம் சப்தமாக உயிர்ப்பித்து ‘‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’’ என ஒலிக்கும்போது, மூல மந்திர ஒலியுடன் நம் காமக் கிராதிகளை அழித்து ஞானத்தைத் தர ஐயப்பனைச் சரணடைகிறோம் என்று பொருள்.

No comments:

Post a Comment