Tuesday, 28 November 2017

கிரகதோஷமா! அரசமரத்தைச் சுற்றுங்க!

Image result for arasamaram

தெய்வீகமான மரங்களில் சிறப்பானது அரசு. அரசமர சுள்ளி ஹோமம், யாக குண்டங்களில் நெருப்பிட பயன்படுத்தப்படுகிறது. மும்மூர்த்திகளின் வடிவமாகத் திகழும் இதன் அடியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் இருப்பதாக ஐதீகம். இதற்கு "அஸ்வத்த விருட்சம்' என்று பெயர். "அஸ்வத்தம்' என்றால் "குதிரை'. ஒருமுறை அக்னிதேவன், குதிரையாக மாறி அரசமரத்தில் ஒளிந்து கொண்டதால், இதற்கு "அஸ்வத்தம்' என்ற பெயர் ஏற்பட்டது. திங்கள்கிழமையும், அமாவாசையும் கூடி வரும் நாளில் பெண்கள் அரசமரத்தை வலம் வந்து வழிபடுவது மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு ஆகிய பலன்களைத் தரும். இதன் அடியில் நாகங்களை பிரதிஷ்டை செய்யும் வழக்கம் தமிழகத்தில் மரபாக பின்பற்றப்படுகிறது. சர்ப்பதோஷத்தால் (ராகு, கேது கிரக தோஷம்) திருமணம், குழந்தைப்பேறு தடைபடுபவர்கள் அரசமரத்தடி நாகர்களுக்கு பாலபிஷேகம் செய்தால் தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment