Friday 24 November 2017

அதிசய சுயம்பு விநாயகர்


அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர், சென்னை சாலிகிராமம் பாலவிநாயகர் கோயிலில் சுயம்பு திருமேனியாக அரசமரத்திலேயே வீற்றிருக்கிறார். ஒரே இடத்தில் 19 வடிவங்களில் இயற்கையாக விநாயகர்கள் உருவாகி இருப்பது அதிசயம்.

விநாயகருக்கு குடைபிடித்துக் கொண்டிருந்த அரசமரமே படிப்படியாக பாலவிநாயகராக மாறி விட்டது. அரசமரத்தின் வேர்ப்பகுதி பிரம்மரூபம், நடுப்பகுதி விஷ்ணுரூபம், மேல்பகுதி சிவரூபம் என்பது வேதவாக்கு. இங்கு விஷ்ணுபாகத்தில் விநாயகர் இருப்பதால் "அனுக்கிரஹ மூர்த்தி'யாக விளங்குகிறார். 1983 ஜனவரி26ல் தான் இந்த விநாயகர் வடிவம் வெளிப்பட்டது. 1987 ஜனவரி 26 முதல் ஏகதின லட்சார்ச்சனையும், அன்னதானமும் நடக்கிறது. ஞாயிறு ராகுகாலத்தில் சிறப்புவழிபாடு உண்டு. 

இங்கு வள்ளி தெய்வானை சமேத சிங்காரவேலன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் உண்டு. பிரகாரம் வலம் வரும் பாதையில் காஞ்சிப்பெரியவர் வீற்றிருக்கிறார். "மயூர வாகன சக்ரவியூக மணிமண்டபம்' என்ற கண்ணாடி அறையும் இங்குள்ளது. வடபழநியில் இருந்து விருகம்பாக்கம் சாலையில் அரை கி.மீ., தொலைவில் சாலிகிராமம் பரணி காலனியில் உள்ளது இந்தக்கோயில்.

No comments:

Post a Comment