திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர் என்று கூறுவர். சிலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகளும் காரணமாக இருக்கலாம். ஜாதகத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் திருமணத் தடை ஏற்படுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
• திருமணத் தடை ஏற்படக் காரணம் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும்போது ஏற்படுகிறது. களத்திர ஸ்தானாதிபதி எனும் 7-க்குடையவன் நீச்சம் பெற்றால் திருமணம் அமையக் கால தாமதம் ஏற்படுகிறது.
• 7-ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் திருமணம் அமையத் தடை ஏற்படுகிறது. களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.
• 7-ம் பாவத்திற்கோ, 7-ம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை ஏற்படுகிறது. 7-ம் அதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஏற்பட்டால் திருமணம் தாமதமாகிறது.
• சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் 7ல் இருந்து, சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் மறைவு பெற்றாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஆகிறது. 7-ம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் திருமணத் தடை உண்டாகிறது. 7-ம் அதிபதி நவாம்ச லக்னத்திற்கு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
• குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1ல் இருந்து சனி, 12ல் இருப்பதும் திருமணத் தடைக்கு காரணமாகும்.
No comments:
Post a Comment