
கணம்புல்லர் என்ற சிவபக்தர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவதை தன் அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார். செல்வந்தரான இவர் தன் பொருளை எல்லாம் சிவாலயங்களில் தீபமேற்ற செலவழித்தார். செல்வத்தை இழந்த நிலையில், கணம்புல் என்னும் புல்லை அறுத்து விற்று வழிபாட்டைத் தொடர்ந்தார். ஒருநாள் புல்லை விலைக்கு வாங்க யாரும் வரவில்லை. அப்புல்லையே திரியாக்கி விளக்கேற்றினார். அது எரியாமல் அணைந்து போனது. உடனே, தன் தலைமுடியையே திரியாக்கத் துணிந்தார். அவரது பக்தியை மெச்சிய சிவன், பார்வதி உடன் எழுந்தருளி நற்கதி அளித்தார்.
No comments:
Post a Comment