Monday, 7 August 2017

கடவுளுக்கு பிடித்தமானவர்கள்


ஒரு செல்வந்தரின் தோட்டத்தில், ஒரு சுறுசுறுப்பு காரனும், ஒரு சோம்பேறியும் வேலை பார்த்தனர். எஜமான் தோட்டத்திற்கு வந்தால் போதும். சோம்பேறி உடனே எழுந்து ஓடிப்போய் வணக்கம் தெரிவிப்பான். ""எஜமானே! உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது!'' என்று புகழ்பாடி அவரை மகிழ வைக்க முயற்சிப்பான்.சுறுசுறுப்பு ஆசாமியோ, அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, வேலையில் கவனம் செலுத்துவான். புகழ் பாடுவதில் அவனுக்கு விருப்பமில்லை.அந்த முதலாளியும் முகஸ்துதியை விரும்பாதவர். எனவே, உண்மையான உழைப்பாளியையே அவர் அதிகம் நேசித்தார். இதுபோல் தான் இந்த உலகமும்! கடவுள் தான், உலகம் என்னும் தோட்டத்தின் எஜமானர். இந்த தோட்டத்திலும் இரண்டு வகையான பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர், கடவுளை வணங்குகிறேன் என்ற பெயரில் ஏகமாய் அவரைப் புகழ்வர். தன் சுயநலக் கோரிக்கைகளையே அவரிடம் வைப்பர். இன்னொரு பிரிவினர் அவரிடம் தனக்காகவும், பிறருக்காகவும் வேண்டுவர். இவர்களையே கடவுளுக்கும் பிடிக்கும்.

No comments:

Post a Comment