Wednesday 2 August 2017

மனசு கட்டுப்படணும்


வாலிபன் ஒருவனுக்கு தியானக்கலையில் பெரிய ஆளாக வரவேண்டுமென ஆசை. தியானத்தை துவங்கினான்.

எங்கோ கொலுசு சத்தம் கேட்டது. இவனுக்கு அந்தக் கொலுசு அணிந்து வந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவை பார்த்தால் என்ன என்று தோன்றிற்று. ஊஹூம்... அப்படி அவளைப் பார்த்தால் தியானம் கலைந்து விடும்... காது கேட்பதால் தானே கொலுசு சத்தம் கேட்கிறது என காதில் பஞ்சை வைத்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் எங்கிருந்தோ மலரின் நறுமணம் காற்றில் பரவி வந்தது.

வாலிபன் நினைத்தான்.

"இது அவளது கூந்தலில் சூடியுள்ள மல்லிகையின் மணமாகத்தான் இருக்க வேண்டும்... இதை நுகர்ந்து கொண்டே இருந்தால் தியானம் கைகூடாது' என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, மூக்கை ஒரு துணியால் கட்டிக் கொண்டான். கண், காது, மூக்கு எல்லாவற்றுக்கும் தாழ்ப்பாள் போட்டாயிற்று. தியானம் நிலைக்க மறுத்தது. ஏன் தெரியுமா? மனசு மட்டும் அவளைச் சுற்றியே வந்தது. "அவள் எப்படி இருப்பாளோ? அழகா, அழகில்லையா, குணவதியா? குணமற்றவளா! ராஜகுமாரியா! ஏழைப்பெண்ணா?'' என்று!

நம் உறுப்புகளைக் கட்டுப்படுத்தி பயனில்லை. மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படியானால் தான் தியானம் கைகூடும். இல்லாவிட்டால், தியானம் என்பது கண் மூடி தூங்குவதற்கே ஒப்பாகும்.

No comments:

Post a Comment