Thursday, 21 September 2017

தாரா அபிஷேகம்

Image result for sivan abishegam

சில சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு பாத்திரம் கட்டி, அடியில் துளையிட்டு,பாத்திரத்தில் இளநீர், தண்ணீர், நெய், பன்னீர் ஆகியவற்றில்ஏதாவது ஒன்றை நிரப்பிவிடுவார்கள். அது சொட்டு சொட்டாக சிவன்மீது விழும். சிவபெருமான் நெற்றிக்கண்ணுடன் கூடியவர் என்பதால் உஷ்ணமாக இருப்பார். இதைத் தணிப்பதற்காக ஜலதாரை எனப்படும் தாரா அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு செம்பின் கீழ் துளையிட்டு உள்ளே தண்ணீரை நிரப்பி விடுவர். அது சொட்டு சொட்டாக லிங்கத்தின் மீது விழும். இதுவே ஜலதாரை. இந்த பூஜையால் குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான விருத்தி ஏற்படும். எல்லா நலனும் உண்டாகும். நோய்கள் நீங்கும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள், கெட்ட நண்பர்கள் விலகுவர். கெட்ட குணங்கள் மறையும். பகைவர்கள் ஒதுங்கிப் போவார்கள். பயம் நீங்கும், தேன் அபிஷேகம்செய்தால் தோல் நோய் நீங்கும். கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் மோட்சம் கிட்டும், சகல துயரமும்நீங்கும்.

No comments:

Post a Comment