Wednesday, 20 September 2017

சூரியனின் தந்தை


""உலகின் இருளைப் போக்கி ஆத்மபலத்தை தரும் ஒளி மயமான சக்தி எதுவோ அதனை நமஸ்கரிப்போமாக!'' என்று ரிக்வேதம் சூரியனைப் போற்றுகிறது. காஷ்யப முனிவரின் பிள்ளையே சூரியன். வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வானமண்டலத்தில் பவனி வருவதால் இவருக்கு, "சப்தாஸ்தவன்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரனான மாதலி என்பவனே சாரதியாக இருக்கிறான். சூரிய சித்தாந்தம் என்னும் நூலில், நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களும் தேவையான ஆற்றலை சூரியனே வழங்குகிறார் என்று கூறுகிறது. அந்த ஆற்றலை சூரியன் காயத்ரி மந்திரம் மூலமே பெற்று, அக்னிசொரூபமாக வானில் திகழ்கிறார். 

No comments:

Post a Comment