Saturday 23 September 2017

மேல்கோட்டை வைரமுடி சேவை

Image result for செல்வப்பிள்ளை பெருமாள்

பெங்களூருவிலிருந்து மைசூரு செல்லும் வழியிலுள்ளது மேல்கோட்டை செல்வப்பிள்ளை பெருமாள் கோயில். இவர் ராமானுஜரால் பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர். விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன் உதவியுடன் அவர் இக்கோயிலைக் கட்டினார். இங்குள்ள உற்சவர் சிலை முகலாயர் காலத்தில் மேல்கோட்டையிலிருந்து டில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராமானுஜர் அங்கு சென்று பாதுஷாவின் ஒத்துழைப்போடு, பெருமாளை மீண்டும் மேல்கோட்டைக்கு வர சென்றார். அப்பெருமாளைக் கண்டதும், "வாராய் என் செல்வப் பிள்ளையே!' என்று அழைத்ததும், பெருமாளும் அவரது மடியில் வந்து அமர்ந்து கொண்டார். பின்னர், அவரை மேல்கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்தார். இதனால் உற்சவருக்கு, "செல்வப்பிள்ளை', "சம்பத் குமாரர்' என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு. 

பங்குனி உத்திரநாளில் அரைவட்டவடிவ இரட்டை யாளிமுகம் கொண்ட பிரபையின் நடு வில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு கருட வாகனத்தில் வைரக்கிரீடம் தரித்து செல்வப்பிள்ளை பெருமாள் பவனிவருவார். இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.

No comments:

Post a Comment