Thursday 21 September 2017

பாதாள அஞ்சன விக்ரகம்

Image result for guruvayur

தமிழகத்தில் ஸ்ரீரங்கமும், ஆந்திராவில் திருப்பதியும் எப்படி சிறப்பாகத் திகழ்கிறதோ அதுபோல, கேரளத்தில் சிறப்புடன் திகழும் திருத்தலம் குருவாயூர். குருவும், வாயுவும் சேர்ந்து இவ்விடத்தில் குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்ததால் "குருவாயூர்' என பெயர் வந்தது. வெளிபிரகார கொடிமரத்தடியில் இருக்கும் பலிபீடம் குரு,வாயுவின் அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் விக்ர ஹம் "பாதாள அஞ்சனம்' என்னும் மூலிகையால் ஆனது. குருவிற்கும், வாயுவிற்கும் இவ்விடத்தைக் காட்டி அருள்புரிந்த சிவபெருமான், கிருஷ்ணன் கோயில் அருகிலுள்ள மம்மியூரில் கோயில் கொண்டுள்ளார். அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்படும். முதல்நாள் கிருஷ்ணர் சூடிய மாலை, துளசி ஆகியவற்றோடு காணும் நிர்மால்ய தரிசனத்தை மிகுந்த பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர். காலை 3 முதல் இரவு 10மணிவரை குருவாயூரப்பனுக்கு 12 முறை அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு நடைபெறும் திருப்புக்கா தரிசனத்தில் பெருமாளுக்கு "அஷ்டகந்தம்' என்னும் எட்டுவிதமான வாசனைப்பொருள்களால் தூபமிடுவர். கருவறை நுழைவாயில் சிறிதாக இருந்தாலும், வெகுதூரத்தில் இருந்து கூட தரிசிக்கும் விதத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தீபஸ்தம்பம், துவஜஸ்தம்பம் (கொடிமரம்) பலிபீடம் ஆகியவை மூலவரை மறைப்பதில்லை. இங்கு பூஜை செய்யும் மேல்சாந்தி ஆறுமாத காலம் குடும்பத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. குழந்தைக்கு சோறூட்டுவது, துலாபாரமாக வாழைப்பழம், இளநீர், வெல்லம், கயிறு கொடுப்பது ஆகிய நேர்த்திக்கடன்கள் முக்கியமானவை. 

No comments:

Post a Comment