Tuesday 19 September 2017

குழந்தை வடிவப் பெருமாள்


பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டு தான். ஸ்ரீரங்கமும், திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் பெரிய வடிவில் சயனிக்கும் பெருமாள், திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது விசேஷம். 

தலவரலாறு: ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. பகை நீங்க ஆதிசேஷன் இத்தல பெருமாளை எண்ணி தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். ஆதிசேஷனை அனந்தசயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவரை சலசயனப்பெருமாள், அருமாகடலமுதன் என்று திருநாமம் சூட்டி அழைக்கின்றனர். தாயார் திருமாமகள் நாச்சியார் எனப்படுகிறாள். இங்குள்ள உற்சவரை கிருபாசமுத்திர பெருமாள் என்றும், உற்சவ தாயாரை தயாநாயகி என்றும் அழைக்கின்றனர். 
சிறப்பம்சம்: 108 திவ்யதேசங்களில் 11வது தலம் இது. புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானை எண்ணி, பல்லாண்டு தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான், சிறுப்புலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணையிட்டார். அதன்படி இத்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலி முனிவரும் (ஆதிசேஷன்) வியாக்ரபாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ முனிவருக்கும் இந்தப் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இத்தலத்தில் ஆதிசேஷனுக்கு தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில் உள்ளார். எனவே குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காளசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் செய்ய இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. தீராத நோய், மனநல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

பெயர்க்காரணம்: வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாகசயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது.

திருவிழா: சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோற்ஸவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம், திறக்கும் நேரம்: காலை 7- 12 மணி. மாலை 5.30- 8 மணி. 

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து (35கி.மீ) பேரளம் செல்லும் பஸ்சில் கொல்லுமாங்குடி ஸ்டாப்பில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. ஆட்டோவில் சென்றால் திருச்சிறுபுலியூரை அடையலாம்.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யுங்கள் ! பயன்பெறுங்கள் !!

https://play.google.com/store/apps/details?id=com.wTNBUSBOOKING_5632636

No comments:

Post a Comment