Saturday 23 September 2017

நமது சின்னம் அவிச்சின்னம்

Image result for hindu om tamil

அரசியலில் ஆயிரம் சின்னங்கள் இருக்கலாம். ஆனால், ஆன்மிகத்திற்கு ஒரே ஒரு சின்னம் தான் இருக்கிறது. இதை "அவிச்சின்னம்' என்பர். இதன் பொருள் என்ன?
பாரி, ஓரி, காரி, குமணன், அதியமான் என்றெல்லாம் வள்ளல்கள் தமிழகத்தில் இருந்தார்கள். அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி ஒன்றை பரிசாக அளித்தான். இந்தக் கனியை அவனே சாப்பிட்டால் நீண்டகாலம் வாழ்ந்திருப்பான். ஆனால், பல குழந்தைகளின் ஒளிமயமாக்கிய ஆத்திசூடி போன்ற அருமையான நூல்களை எழுதிய அவ்வைப்பாட்டி இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்தால், எதிர்கால தலைமுறை ஒழுக்கத்துடன் வாழுமே என்ற காருண்யத்தால் இப்படி ஒரு தானம் செய்தான். இது அர்த்தமுள்ள தானம். ஆனால், அர்த்தமே இல்லாத சில தானங்களும் நடந்துள்ளது. ஒரு முல்லைக்கொடி காற்றில் தள்ளாடுகிறதே என்பதற்காக தன் தேரையே நிறுத்தி அதை படரவிட்டானாம் பாரி. மயில் ஒன்று அசைந்தாட, அது குளிரில் நடுங்குகிறதோ என்று நினைத்த அதியமான் ஒரு போர்வையை அதன் மேல் போர்த்தினானாம். எந்த ஊரிலாவது மயிலுக்கு குளிரும் என்று கேள்விப்பட்டதுண்டா? அதன்மேல் போர்வையைப் போட்டால் அதன் கனத்தைக் கூட தாங்குமா என்பது சந்தேகம். இப்படி, அர்த்தமற்றதாக தானங்கள் இருந்தாலு<ம், "தியாக சிந்தனை' என்ற உயர்ந்த தத்துவம் மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட வள்ளல்கள் அவிச்சின்னமாக வந்து கொண்டே இருந்தார்கள். "அவிச்சின்னம்' என்றால் "தொடர்ந்து தோன்றுதல்' என்று பொருள். "இன்னும் பலவள்ளல்கள் இந்த பூமியில் பிறக்கட்டும், தியாகம் தழைக்கட்டும்' என்பதே அவிச்சின்னம் நமக்கு உணர்த்தும் தத்துவம். 

No comments:

Post a Comment