பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ள நூல் திருமந்திரம். இந்நூலை எழுதியவர் திருமூலர். இவர் நாயன்மார்களில் ஒருவராகவும், சித்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இதில் 3000 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரிசையில், சைவ சமயக்கருத்துக்களை விளக்கமாக எடுத்துக்கூறும் முதல் நூல் இதுவே. இந்நூலுக்கு திருமந்திரமாலை, தமிழ் மூவாயிரம் என்ற பெயர்களும் உண்டு. இதில் தந்திரங்கள் என்னும் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ""ஐந்து கரத்தனை யானை முகத்தனை'' என்று தொடங்கும் பாடலே கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது. இதில் "சைவ சித்தாந்தம்' என்னும் தொடர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடு விட்டு கூடு பாயும் திறம் படைத்த திருமூலர் ஒரு பசுவின் துன்பத்தைப் போக்குவதற்காக மாடு மேய்க்கும் இடையனின் உடம்பில் புகுந்து கொண்டதாகவும், ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரத்தை எழுதியதாகவும் கூறுவர். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்', "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்', "அன்பே சிவம்' " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்' "நடமாடக்கோயில் நம்பர்க்கொன்று கொடுங்கள் (நடமாடும் கோயிலான மக்களுக்கு உதவுங்கள்)' ஆகிய புகழ்பெற்ற பாடலடிகள் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளன.
Tuesday, 19 September 2017
ஆண்டுக்கொரு பாட்டு மொத்தம் 3000 பாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment