Tuesday, 19 September 2017

குடும்பத்தை விட்டு விலகியிருக்கும் பூஜாரி


திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கமும், திருப்பதியும் எப்படி சிறப்பாகத் திகழ்கிறதோ அதுபோல, கேரளத்தில் சிறப்புடன் திகழும் திருத்தலம் குருவாயூர். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் கோயில்களில் குறிப்பிடத்தக்கது. குருவும், வாயுவும் சேர்ந்து இவ்விடத்தில் குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்ததால் "குருவாயூர்' என இவ்வூருக்கு பெயர் வந்தது. கோயில் வெளி பிரகாரத்தில் கொடிமரத்தடியில் இருக்கும் பலிபீடம் குரு,வாயுவின் அதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூலவர் விக்ரஹம் சாதாரணக் கல்லால் ஆனதல்ல. பாதாள அஞ்சனம் என்னும் மூலிகையால் ஆனது. குருவிற்கும், வாயுவிற்கும் இவ்விடத்தைக் காட்டி அருள்புரிந்த சிவபெருமான், கிருஷ்ணன் கோயில் அருகிலுள்ள மம்மியூரில் கோயில் கொண்டுள்ளார். இங்கு அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்படும். முதல்நாள் கிருஷ்ணர் சூடியிருந்த பூமாலை, துளசி ஆகியவற்றோடு காணும் நிர்மால்ய தரிசனத்தை மிகுந்த பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர். காலை 3 முதல் இரவு 10மணிவரை குருவாயூரப்பனுக்கு 12 முறை அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு நடைபெறும் திருப்புக்கா தரிசனத்தில் பெருமாளுக்கு "அஷ்டகந்தம்' என்னும் எட்டுவிதமான வாசனைப்பொருள்களால் தூபமிடுவர். கருவறை நுழைவாயில் சிறிதாக இருந்தாலும், வெகுதூரத்தில் இருந்து கூட தரிசிக்கும் விதத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தீபஸ்தம்பம், துவஜஸ்தம்பம் (கொடிமரம்) பலிபீடம் ஆகியவை கூட மூலவரை மறைப்பதில்லை. இங்கு பூஜை செய்யும் மேல்சாந்தி ஆறுமாத காலம் குடும்பத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்ற நியதி பின்பற்றப்படுகிறது. குழந்தைக்கு சோறூட்டுவது, துலாபாரமாக வாழைப்பழம், இளநீர், வெல்லம், கயிறு கொடுப்பது ஆகிய நேர்த்திக்கடன்கள் முக்கியமானவை.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யுங்கள் ! பயன்பெறுங்கள் !!

https://play.google.com/store/apps/details?id=com.wTNBUSBOOKING_5632636

No comments:

Post a Comment