Friday, 22 September 2017

இரண்டு போதாது! நாலாயிரம் வேணும்!


படைப்புக்கடவுளான நான்முகனிடம், நாலாயிரம் கண்கள் வேண்டி அடியார் ஒருவர் பாடுகிறார். அவரை, அப்படி கேட்கும்படிச் செய்த முருகப்பெருமான் திருச்செங்கோட்டில் அருள்பாலிக்கிறார். சேலத்தில் இருந்து 55கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. கொடிமாடச்செங்குன்றூர் என்பது இதன் புராதனப்பெயர். 2000 அடி உயரம் கொண்ட இம்மலையேற 1200 படிகள் ஏறவேண்டும். இங்குள்ள செங்கோட்டு வேலவன் வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் தாங்கி காட்சி தருகிறார். சிவந்தநிறம் கொண்டவர் என்பதால் இப்பெருமானுக்கு ""செவ்வேட்பரமன்'' என்ற சிறப்புப்பெயர் உண்டு. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் எட்டு பாடல்களை இவர் மீது பாடி யுள்ளார்.செங்கோட்டு வேலவனை மனதில் சிந்தித்தவர்க்கு முன்வினைப்பயன்கள் தீண்டாது என்று அவர் உறுதிபடக் கூறுகிறார். 

No comments:

Post a Comment