Friday 22 September 2017

சூழ்ச்சிப்பாட்டு

Image result for கலம்பகம்

கலம்பகம் என்றால் பல வகையான பொருள்களைப் பற்றி பலவகை பாடல்கள், பா இனங்கள் அமையப் பாடப்படும் நூல் ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டில் பாடப்பட்ட நந்திக்கலம்பகம் என்னும் நூல் காலத்தால் முந்தியது. இந்த நூலின் பாட்டுடைத்தலைவன் (கதாநாயகன்) மூன்றாம் நந்திவர்மன். இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இவர்களில் மாற்றாந்தாயின் மகன் நந்திவர்மனைக் கொல்வதற்கு முயற்சி செய் தான். அவ்வாறு கொல்லும் முன் அவன் பாடிய நூல் இது என்பர். தன்னைக் கொல்வதற்கான சூழ்ச்சி நிறைந்த இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு நந்திவர்மன் மனம் வருந்தி இறந்தான். கலம்பக நூல்களில் ஒரு சிறப்பு உண்டு. கடவுளைக் குறித்து 100 பாடல்கள், முனிவர்களுக்கு 95, மன்னனுக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, அவர்களுக்கு பிற்பட்டவருக்கு 30 என்ற அளவில் இருக்கும். கலம்பக நூல்களில் இரட்டையர்கள் எழுதிய தில்லைக் கலம்பகம், குமர குருபரர் எழுதிய மதுரைக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் எழுதிய திருவரங்கக் கலம்பகம் ஆகியவை புகழ் பெற்றவை.

No comments:

Post a Comment