Wednesday, 20 September 2017

தெற்கு பார்த்த சிவாலயம்


ஆகமவிதிப்படி சிவன் கோயில்களை கிழக்கு பார்த்து அமைப்பது மரபு. ஆனால், சில கோயில்கள் மேற்கு மற்றும் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. முற்றிலும் மாறுபட்டதாக தெற்கு நோக்கி அமைந்துள்ள சிவாலயமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு உருவம், அருவம் (உருவமின்மை), அருவுருவம் (லிங்கம்) என்று மூன்று விதமான வழிபாடுகள் உண்டு. கருவறையில் சிவபெருமானை அருவமாகவே காண்பது இங்கு மட்டுமே. அதாவது, இந்தக் கருவறையில் சிலையோ, லிங்கமோ கிடையாது. ஆவுடையாரின் மீது, ஒரு குவளையை மட்டும் அடையாளம் தெரிவதற்காக வைத்திருப்பார்கள். கொடிமரம், நந்தி, அம்மனுக்கும் உருவம் கிடையாது. தீபாராதனையை தொட்டு வணங்கும் முறையும் கிடையாது. சந்நிதி முன் இருக்கும் ஒரு திட்டுக்கல்லில் புழுங்கல் அரிசி சாதத்தை வடித்துக் கொட்டுவர். அதில், வெளிவரும் ஆவி மட்டுமே சுவாமிக்கு நிவேதனம். இத்துடன் பாகற்காயும், கீரையும் இடம் பெறுகின்றன. 

No comments:

Post a Comment