சிவபெருமான் மயானத்தில் தாண்டவமாடுவதாகக் கூறுவர். ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்?
யாராவது இறந்தால் மயானத்துக்கு செல்கிறோம். அங்கே சென்றதும், மனிதனின் மனம் மாறுகிறது. வீட்டிலுள்ள சிந்தனைகள் தொலைகின்றன. ""குடும்பத்துடன் எவ்வளவு பந்தபாசமாக இருந்தார் இவர், எப்படித்தான் விட்டுச்செல்ல மனம் வந்ததோ'' என்று ஒருவர் சொல்வார். இன்னொருவர், ""இன்று அவருக்கு, நாளை நமக்கு,'' என்பார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! இதில் இருந்து என்ன தெரிகிறது? சத்தியமே ஜெயிக்கும். ஆம்..சுடுகாட்டிற்கு சென்றதும், வாயில் இருந்து வார்த்தைகளாய் வரும் சத்தியம், வீட்டிலும் நாட்டிலும் கடைபிடிக்கப்பட்டால் எவ்வளவு பெரிய வெற்றியை நாம் அடையலாம்! எனவே தான் சத்தியத்தின் இருப்பிடமான மயானத்தை சிவபெருமான் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். அதாவது சிவம் என்றாலே சத்தியம் என்பது புலனாகிறது. அந்த சத்தியதேவனை சிவராத்திரியன்றுநம் மனதில் இருத்தி பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment