Tuesday, 19 September 2017

இலக்கியப் பார்வை


இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும். நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

திருமங்கையாழ்வார் பாடல்கள்

திருமங்கையாழ்வார் திருக்குறையலூரில் அவதரித்தவர். இவருடைய இயற்பெயர் நீலன். சோழமன்னனிடம் சேனாதிபதியாக இருந்து பலவெற்றிகளைப் பெற்றார். அதனால் "பரகாலன்' என்னும் சிறப்புப்பெயர் பெற்றார். மன்னனே இவருடைய வீரத்தைப் பாராட்டி திருமங்கைநாட்டிற்கு குறுநில மன்னனாக்கினான். வைணவ
மரபில் பிறந்த குமுதவல்லியை மணம் செய்தார். நாள்தோறும் 1000 அடியாருக்கு அன்னமிடும் தர்மத்தைச் செய்துவந்தார். பொருள் அனைத்தையும் இழந்து வழிப்பறியில் ஈடுபட்டு தானம் செய்தார். திருமாலும், திருமகளும் புதுமணத்தம்பதியர் போல வந்தனர். அவர்களிடமும் பொருளைப் பறிக்க முயன்றார். அப்போது பெருமாளே எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாய' மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். மனம் மாறிய அவர், அன்றுமுதல் திருமாலுக்கே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து ஆழ்வாரானார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அதிக பாசுரங்களைப் பாடிய பெருமை இவருக்கு உண்டு. பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பெண்கள் மடலேறுதல் கூடாது என்ற தொல்காப்பிய விதியை மீறியவர் இவர். "நான் இவளைக் காதலிக்கிறேன்' என்று ஒரு ஆண் ஊரறியச் சொல்வது தான் "மடலேறுதல்' என்பதாகும். "உலகறிய ஊர்வன் நான்' என்று பெரியதிருமடலில் திருமால் மீது, தான் கொண்ட காதலைத் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். திருமாலின் கையிலிருக்கும் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக இவர் பிறந்தார் என்றும் சொல்வர்.

தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்யுங்கள் ! பயன்பெறுங்கள் !!

https://play.google.com/store/apps/details?id=com.wTNBUSBOOKING_5632636

No comments:

Post a Comment