Sunday 25 March 2018

நீயிருக்க பயம் எதற்கு!


இலங்கை செல்ல கடலைக் கடக்க முடிவு செய்தார் ராமர். உதவிக்காக சமுத்திர ராஜனை எதிர்பார்த்தார். ராமேஸ்வரம் அருகிலுள்ள திருப்புல்லாணி என்னும் ஊரில் தர்ப்பையை விரித்து மூன்று நாளாக படுத்துக் கிடந்தார். சமுத்திர ராஜன் கண்டு கொள்ளவில்லை. உடனே லட்சுமணனிடம், “வில்லைக் கொடு... கடல் மீது பாணம் எய்து அதை வற்றச் செய்கிறேன். வானரங்கள் எல்லாம் நடந்தே போகட்டும்” என்றார் கோபமாக. அப்போதும் அவன் பயப்படவில்லை.

உடனே அம்பைத் தொடுக்கும் வேளையில் சமுத்திர ராஜன் வெளிப் பட்டான். “ராமா! என்னை கொல்ல நினைக்கிறாயே.... உன் தம்பி இருக்கும் போது, நான் ஏன் பயப்படப் போகிறேன்,” என்றான். 

“யார்...இந்த லட்சுமணனை சொல்கிறாயா?” என்றதும், “இல்லை...இல்லை...பரதனை சொல்கிறேன். அவன் உன் பாதுகைகளை (காலணி) பெற்றான் இல்லையா! அதற்கு தினமும் ஆயிரம் குடம் தீர்த்தத்தில் அபிஷேகம் செய்கிறான். அத்தீர்த்தம் சரயு நதி வழியாக என்னை வந்தடைகிறது. அதனால் சமுத்திர ராஜனாகிய நான் வலிமை பெற்றவனாகி விட்டேன். உன் அருள் இருக்க பயம் எதற்கு? அம்பை தாங்கும் சக்தியும் இருக்கிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்டான். எதிர்த்து நின்ற ராமரை, அவரது திருவடி தொடர்பால் மடக்கி விட்டான் சமுத்திர ராஜன். 

No comments:

Post a Comment