Saturday, 24 March 2018

எங்கிருக்கு வெள்ளையந்தீவு


வைகுண்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவியோடு வீற்றிருக்கிறார் திருமால். இங்கு நித்யசூரிகள்(முக்தி பெற்றவர்கள்) பக்தியுடன் சாமகானம் பாடி வழிபடுவர். இவர்களுக்கு பசி, தாகம், துாக்கம், களைப்பு சிறிதும் உண்டாகாது. வைகுண்டம் தவிர, திருமால் 'வெள்ளையந்தீவு' என்னும் இடத்தையும் தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறார். பாற்கடலை தான் வெள்ளையந்தீவு என்பர். 

இங்கு ஆதிசேஷன் என்னும் பாம்பின் படுக்கையில், யோகநித்திரையில் இருப்பார் திருமால். உலகிலுள்ள அனைத்தையும் அறிந்தபடி துாங்குவது யோகநித்திரை. அசுரர்களால் துன்பம் நேர்ந்தால், வெள்ளையந்தீவின் கரைக்கு வந்து தேவர்கள் முறையிடுவர். அப்போது அவர்கள் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரம் சொல்லி கூப்பாடு செய்வதால் இதற்கு 'கூப்பாடு உலகம்' என்றும் பெயருண்டு. 

No comments:

Post a Comment