Saturday, 24 March 2018

கிழமைகளும் ராகு கால நேரங்களும்

கிழமைகளும் ராகு கால நேரங்களும்

ஒருவாரத்தில் உள்ள 7 நாட்களிலும் ராகுகாலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தை பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன. அதனையே மக்களும் பின்பற்றுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சூரியன் எப்போது உதயமாகிறதோ அந்த நேரத்தை வைத்தே ராகுகாலம் கணிக்க வேண்டும் என்றும், ராகு காலத்தில் பயணம் மட்டுமே செல்லுதல் கூடாது என்றும், இதனை தவறாக புரிந்து கொண்டு மக்கள் இந்த நேரத்தில் எந்த நல்ல செயலையும் செய்தல் கூடாது என்ற எண்ணம் வளர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

1. ஞாயிறுக்கிழமை - மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
2. திங்கட்கிழமை - காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
3. செவ்வாய்க்கிழமை - மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை
4. புதன்கிழமை - நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
5. வியாழக்கிழமை- மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை
6. வெள்ளிக்கிழமை- காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
7. சனிக்கிழமை- காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

மிகவும் சிறப்பான ராகுகால பூஜைக்குரிய நாள் செவ்வாய், ஏனெனில், செவ்வாய்க்கிழமையன்று வரும் ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜைக்கு உடனடிப் பலன் கிடைப்பதை சித்தர்களும், உபாசகர்களும் அனுபவ பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டுப் பலனடைந்தவனாகவான் என்றும், நவக்கிரகங்களில் மிகவும் வலிமை பொருந்திய ராகு பகவான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜித்து மகிழ்ச்சியான முகத்துடனும் நிறைந்த மனதுடனும் விளங்குவதால்தான் மங்களவார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

ராகு துர்க்கையை வணங்கி மகிழ்ந்ததனாலேயே இன்று ராகுவின் பெயரில் துர்க்கையை மகிழ்வித்தால் ராகு மகிழ்வான் என்ற நம்பிக்கையில் துர்க்கை கருவறையில் ராகு கால பூஜை நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment